ஒன்றிய அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்காத கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என UGC புதிய அறிவிப்பை அறிக்கையின் வழியே தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு தற்பொழுது நிதி நெறுக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 21 பக்கங்களில் UGC 2025ஆம் ஆண்டிற்கான வரைவு அறிக்கையை தயாரித்துள்ளது.
இந்த அறிக்கையில், பல்கலைகழக மானியக்குழு வகுத்திருக்க கூடிய விதிமுறைகளை கண்டிப்பாக அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைகழகங்கள், கல்லூரிகள் ஏற்கவேண்டும். விதிமுறைகளை ஏற்காத கல்வி நிறுவனங்கள் UGC திட்டங்களில் இருந்து நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை ஏற்காத கல்வி நிறுவனங்ககளில் வழங்கப்படும் பட்டங்கள் செல்லாததாகிவிடும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
