சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர்க்கண்காட்சி இன்று தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர்
சென்னை, செம்மொழிப் பூங்காவில் நடைபெற உள்ள மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
பல்வேறு ஊர்களில் இருந்து 30 லட்சம் மலர்ச் செடிகள் கொண்டுவரப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மலர்களைக் கொண்டு யானை, மான், முயல், ஆமை, மயில், வண்ணத்துப்பூச்சி, அன்னப்பறவை உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 18-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும்.
பெரியவர்களுக்கு 150 ரூபாயும், சிறியவரகளுக்கு 75 ரூபாயும் கட்டணம் நிரணயிக்கப்பட்டுள்ளது.
