June 23, 2026
மு.க.ஸ்டாலின் -  செல்லூர் ராஜு

வேங்கை வயல் சந்தேகம்

Share

மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாடம் எடுபடாதென அறிவித்தார்.

மேலும் அவர், டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என 10 மாதமாக ஏன் முதலமைச்சர் அழுத்தம் தரவில்லை. சட்டமன்றத்தில் 2 மணி நேரமாக டங்ஸ்டன் திட்டத்தை எதிராக பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு அவர் ஏன் பதிலளிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மக்களும் அ.தி.மு.க.வும் போராடியதை தொடர்ந்து தான் முதலமைச்சர் அதனை எதிர்த்தார்.

2026-இல் தி.மு.க ஆட்சிக்கு வராது. தி.மு.க.வை நம்பிய கூட்டணி கட்சிகள் மக்கள் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன.

தி.மு.க.வை ஆதரித்த கம்யூனிஸ்டு கட்சியும் விடுதலை சிறுத்தைகளும் வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை கோருகிறார்கள். வேங்கை வயல் விவகாரத்தில் திமுகவினரே ஈடுபட்டு இருப்பார்களோ என சந்தேகம் வருகிறது.

பெரியாரை இழிவாக பேசிய சீமானை தி.மு.க ஏன் கைது செய்யவில்லை.

– என பல்வேறு கேள்விகளை தி.மு.க.வின் மீது எழுப்பியுள்ளார்.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *