Bollywood - Hollywood
ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் போன்ற பாலிவுட் நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில், தற்போது திஷா பதானியும் நடிக்க இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
திசா பதானி இந்தியாவைச் சேர்ந்த நடிகை. இவர் வருண் தேஜாவிற்கு ஜோடியாக 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான ‘லோஃபர்’ மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து இவர் பாலிவுட் சினிமாவில் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துள்ளார்.
இவர் சென்ற ஆண்டு பிரபாசுடன் கல்கி 2898 ஏடி, சூர்யாவுடன் கங்குவா மற்றும் சித்தார்த் மல்கோத்ராவுடன் யோதா ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில், இவர் பாலிவுட்டில் ‘வெல்கம் டு தி ஜங்கிள்’ படத்தில் நடித்து வருகிறார். அவரது புகைப்படம் ஒன்று தற்பொழுது வெளியாகி அவர் ஹாலிவுட்டில் அறிமுகமாக இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அதன்படி, பாஸ்ட் அண்ட் பியூரியஸ் நடிகர் டைரஸ் கிப்சன் மற்றும் நடிகர் ஹாரி குட்வின்ஸுடன் திஷா பதானி இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
