- ரேஷன் அரசி 3 கப் எடுத்துக்கொள்ள வேண்டும் (ஒரு கப்புக்கு 220 கிராம்) அதை தண்ணீரில் கல் உப்பு அல்லது எலுமிச்சை சாறு கலந்து கையால் அழுத்தி நன்றாகத் தேய்த்து கழுவ வேண்டும்.
- முதலில் பழுப்பு நிறத்தில் கழுவிய நீர் இருக்கும். லேசான வாசனையும் வரும். அதனால் தொடர்ந்து பத்து முறை அந்த அரிசியை நன்றாக கழுவ வேண்டும். அப்பொழுது அரிசி வெள்ளையாக மாறிவிடும். வாசனை ஏதும் வராது.
- அந்த அரிசியுடன் கடையில் வாங்கிய இட்லி அரிசியை 2 கப் சேர்க்கலாம். அப்படி சேர்த்தால் அதில் 1¼ கப் உலுத்து சேர்த்தால் போதுமானதாக இருக்கும். ஒருவேளை ரேஷன் அரிசியுடன் கடை அரிசியை சேர்க்கவில்லை எனில், உலுந்தை 2 கப் சேர்க்கவேண்டும்.
- கடையில் வாங்கிய அரிசி 2 கப் எடுத்துக்கொண்டு, அத்துடன் ¾ கப் வெள்ளை அவல் எடுத்துக்கொள்ளலாம். இவை இரண்டையும் தனித்தனியே இரண்டுமுறை நன்றாக கழுவி எடுத்துகொள்ள வேண்டும்.
- பின்னர் ரேஷன் அரியுடன் கடை அரிசியையும் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
- உலுந்து 1¼ கப் ½ மணி நேரம் ஊற வைக்கவேண்டும்.
- வெள்ளை அவலை 10 நிமிடம் ஊற வைக்கவேண்டும்.
- பின்னர் மாவாட்டல் – முதலில் ஊறிய உலுந்தை கைப்பிடி கைப்பிடியாகப் போட்டு – லேசாக தண்ணீர் விட்டு ஆட்ட வேண்டும். உலுந்து மாவு நன்கு வெண்மையாக வரும் வரை (½ மணி நேரம்) ஆட்ட வேண்டும். பஞ்சுபோல ஆட்டி அதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- அடுத்தது அவலை கொஞ்சமாகப் போட்டு ஆட்டிவிட்டு – அத்துடன் அரிசியை சிறுக சிறுக சேர்த்து – தண்ணீரை சிறுக சிறுக தெளித்து ஆட்ட வேண்டும். அரிசி மாவு நைசாக வரும் வரை (20 நிமிடம்) ஆட்ட வேண்டும்.
- அத்துடன் தேவையான அளவு கல் உப்பு சேர்த்துகொள்ள வேண்டும்.
- அரிசி மாவு கெட்டியாகவும் இல்லமல், தண்ணியாகவும் இல்லாமல் மிதமாக பதமாக ஆட்டி எடுத்துகொள்ள வேண்டும்.
- பின்னர் கிரைண்டரில் 1 கப் தண்ணீர் விட்டு கழுவி – அந்த நீரை அரைத்த மாவுடன் கலந்து பதமாக எடுத்துவைத்துக் கொள்ளவேண்டும்.
- இரவு 9.00 மணிக்கு மாவை ஆட்டி சுமார் 8 – 9 மணி நேரம் புளிக்க விடவேண்டும்.
- காலை ஒரு 7 மணிக்கு பார்த்தால் பாவு பொங்கிய நிலையில் இருக்கும். அதனை நன்றாக கலந்து பதமாக எடுத்து – இட்லி தட்டில் மிதமான அளவில் ஊற்றி எடுக்க வேண்டும்.
- இட்லி தட்டை பாத்திரத்தில் வைப்பதற்கு முன்பே அதில் தேவையான அளவு தண்ணீரை நன்கு கொதிக்க விட்டப்பின் – இட்லி தட்டை வைக்கவேண்டும். அவ்வாறு வைத்தால் 5 நிமிட்த்தில் இட்லி வெந்துவிடும்.
- மென்மையான மெதுமெதுப்பான இட்லி தயார்.
தேவையான பொருட்கள்
1. 3 கப் ரேஷன் அரிசி
2. 2 கப் கடை அரிசி
3. 1½ கப் உளுந்து
4. ¾ கப் வெள்ளை அவல்
5. ¾ தேக்கரண்டி (டீஸ்பூன்) கல்லு உப்பு.
