April 30, 2026
Tamil Nadu Government
Share

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2025-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதுக்கு புலவர் மு.படிக்கராமு – பேரறிஞர் அண்ணா விருது – எல்.கணேசன்; மகாகவி பாரதியார் விருதுக்கு கவிஞர் கபிலன்; பாவேந்தர் பாரதிதாசன் விருது – கவிஞர் பொன்.செல்வகணபதி; தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்; முத்தமிழ்க் காவலர் ஆ.பெ. விசுவநாதம் விருது – வே.மு.பொதியவெற்பன்; ஆகியோருக்கு வழங்கத் தேர்வு செய்துள்ளனர்.

விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியுடன் பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்படுவர்.

மேலும், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது – விடுதலை ராஜேந்திரன்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது – து.ரவிக்குமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியுடன் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப் படுவர்.

மேலும் முத்தமிழறிஞர் கலைஞர் விருது – முத்து வாவாசிக்கு அளிக்கப்பெற உள்ளது. இவ்விருது பெறும் விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூ.10 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுடன் வழங்கி பொன்னாடை அணிவித்து சிறப்பிக்கப்பெறும்.

இவ்விருதுகள் தமிழக முதல்வரால் திருவள்ளுவர் திருநாளான ஜன.15ம் தேதியன்று சென்னையில் வழங்கப்படவுள்ளன.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *